முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக மேலும் இருவர் மனு தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமாருக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் இரண்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் மேலும் இரண்டு பேர் குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அனுமதி
வேயாங்கொடை மற்றும் பன்னிப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு பேரே குறித்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும் குறித்த சட்டம் அமைந்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே அந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றி அதன் பின் பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி அதற்கான அனுமதியைப் பெற உத்தரவிடுமாறும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா



