குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மனு கையளிப்பு
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மனு ஒன்று வழங்ப்பட்டுள்ளது.
குறித்த மகஜரை வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தலைமையில் தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தினர் இணைந்து நேற்றுமுன்தினம் (21.08.2023) கையளித்துள்ளனர்.
குருந்தூர் மலை தொல்பொருள் திணைக்களத்திற்கானது. அதனை பௌத்த சமயத்தவர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் வழிபடும் சுதந்திரம் உண்டு. அதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதிக்க வேண்டும் என வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குருந்தூர் மலை உள்ளிட்ட தொல்பொருள் திணைக்களத்திற்குட்பட்ட பிரதேசங்களை தொல்பொருள் திணைக்களம் பாதுகாக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை
தொல்பொருள் திணைக்களத்தின் பிரதேசங்களை பௌத்த சமயம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தொல்பொருள் திணைக்களம் இந்த நாட்டிற்கானது. அது அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையை தரும் விதமாக செயற்பட வேண்டும்.
தொல்பொருள் பிரதேசங்களிற்கு செல்வதற்கும், வழிபடுவதற்கும் பௌத்த சமயத்திற்கு மட்டும் அனுமதி வழங்காது இந்த நாட்டில் வாழும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கும் வழிபடுவதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ.முகுந்தன்சர்மா உட்பட சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த மக்கள் ஒன்றிய பிரதிநதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan