சிவில் செயற்பாட்டாளர் சிரந்த அமரசிங்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
சிவில் செயற்பாட்டாளர் சிரந்த அமரசிங்க பல சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவாக்குவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை உள்ளடக்கிய சம்பவங்கள் தொடர்பில் தம்மை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டரீதியான அடிப்படை
எனினும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், தனக்கு எதிரான எந்தவொரு விசாரணையையும் ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்வதற்கு சட்டரீதியான அடிப்படை எதுவும் இல்லை என்று அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர், சட்டமா
அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan