ஜனக பண்டார தாக்கல் செய்த மனு! - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சிரேஷ்ட அரச சட்டத்தரணி- ஜனக பண்டார தொடர்பில், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சட்டத்தரணி ஜனக பண்டார தாக்கல் செய்த இடைக்கால தடை உத்தரவு மனு தொடர்பாக செப்டம்பர் 29ம் திகதி, மன்றில் முன்னிலையாகுமாறு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட பல பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
மனுதாரர் தமது மனுவில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான உபாலி அபேரத்ன, அதன் உறுப்பினர்கள் தயா சந்திரசிறி ஜயதிலக, சந்திர பெர்னாண்டோ, அதன் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் எவன்ட்-கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி அளித்த முறைப்பாட்டின் பேரில், அரச சட்டத்தரணி ஜனக பண்டார தொடர்பில், அமைச்சரவை 2021, ஜனவரி 18ஆம் திகதி எடுத்த முடிவுகளுக்கு, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை விதித்தது.
ஜனக பண்டாரவுக்கு எதிராக செய்யப்பட்ட பரிந்துரைகள், செப்டம்பர் 29 வரை அமுலில் இருக்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது..

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
