பிரித்தானியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட தொடர் கொலையாளி மரணம்
தொடர் கொலையாளி பீட்டர் டோபின் தனது 76வது வயதில் வைத்தியசாலையின் காலமானார்.
2006 ஆம் ஆண்டு போலந்து மாணவி ஏஞ்சலிகா க்ளூக்கை (23) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து அவரது உடலை, கிளாஸ்கோ தேவாலயத்தின் தரையில் மறைத்து வைத்ததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன், 15 வயதான விக்கி ஹாமில்டன் மற்றும் 18 வயதான டினா மெக்னிகோல் ஆகியோரின் கொலைகளுக்காக அவர் ஆயுள் தண்டனையும் அனுபவித்து வந்தார். டோபின் பிரித்தானியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட தொடர் கொலையாளிகளில் ஒருவராக இருந்தார்.
இடுப்பு உடைந்ததாகவும் சண்டே மெயில் தெரிவித்தது
76 வயதான அவர் இன்று 06:04 மணிக்கு எடின்பர்க் ரோயல் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமானதாக கருதப்படவில்லை என்றும், இது குறித்து சட்டத்தரணியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
டோபினின் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, டோபின் மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடப்பதாகவும், கடுமையான உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கடந்த மாதம் செய்தித்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலையாளிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், கீழே விழுந்து இடுப்பு உடைந்ததாகவும் சண்டே மெயில் தெரிவித்திருந்தது. அவர் உணவு மற்றும் மருந்துகளை மறுப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, ஜனவரி மாதம், டோபின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, HMP எடின்பர்க்கில் இருந்து நகரின் ரோயல் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.
வீட்டு தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள்
பிப்ரவரி 2016 இல், அவர் தனது அறையில் சரிந்ததாகக் கூறப்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் ரோயல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
2006 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் உள்ள ஒரு தேவாலயத்தின் தரைப் பலகையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏஞ்சலிகா க்ளூக்கின் உடல் டோபின் ஒரு தொடர் கொலையாளியாக அடையாளம் காட்டியது.
இதனை தொடர்ந்து அவர் குறித்த விசாரணைகள் பிரித்தானிய முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் இரண்டு டீனேஜ் சிறுமிகள் கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்க முடிந்தது.
1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 வயதான விக்கி ஹாமில்டன் மற்றும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 வயதான டினா மெக்னிகோல் கொல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரினதும் எச்சங்களும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, கென்ட்டின் மார்கேட்டில் உள்ள டோபினின் முன்னாள் வீட்டின் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.