பணப்பையை குரங்கிடம் பறிகொடுத்த நபர்! - பொலிஸில் முறைப்பாடு (VIDEO)
பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் வழமைக்கு மாறான சம்பவம் ஒன்றினை எதிர்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட வேலை நிமித்தம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் குரங்கு ஒன்று அவரது பணப்பையை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தான் கொண்டு வந்த பையுடன் தனது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியதும், ஒரு குரங்கு பையில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தின் மீது ஏறுவதை அவர் கண்டுள்ளார். பின்னர் அந்த குரங்கு மரத்திலிருந்து மரத்திற்கு நகர்ந்து சென்றுள்ளது.
2000 ரூபா பணம், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை (NIC), வங்கி அட்டைகள் உள்ளிட்டவைகள் அவரது பணப்பையில் இருந்துள்ளன.
இதனையடுத்து அந்த நபரின் பணப்பையை அருகில் எங்கும் காணாததால், காணாமல் போன பொருட்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
