வவுனியா - நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர் கைது
வவுனியா - நெடுங்கேணி, 17 ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில நாட்களாக அவரது மனைவியான அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வீட்டை தீயிட்டு எரித்துள்ளார்
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்குவதற்காக அவசர பொலிஸாருக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்தி அறிவித்திருந்தோம். இருப்பினும் அவர்கள் வருகை தரவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக நேற்று (31.12.2023) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த நபர் மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன், அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளார்.
பொலிஸாரால் கைது
இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளது.

இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸாரால் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan