உறங்கும் பெண்களை பார்க்க இரவில் வீடுகளுக்குள் நுழைந்த நபர்! பொலிஸார் நடவடிக்கை
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் நித்திரை கொள்வதை பார்க்கும் பழக்கம் கொண்ட நபர் ஒருவரை பதுளை - ஹாலியெல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொரலந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்ல - உடகும்பல்வெல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து நித்திரை கொண்டிருந்த பெண்களைப் பார்க்க முயன்றபோதோ சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக நடவடிக்கை
இதன்போது வீட்டில் இருந்தவர்கள் அவரைப் பிடிக்க துரத்தியபோது, அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கொழும்பிலிருந்து பதுளைக்குச் செல்லும் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வீட்டாரிடம் இருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஹாலியெல பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
எல்ல பகுதியில் உள்ள சுமார் ஆறு வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக அவர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்..
சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக எல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
