வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த நபர் கடத்தல்
ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த நபரை கடத்திச்சென்ற மூன்று பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கடத்தக்கு பயன்படுத்திய இரண்டு லொறிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய சிலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
ஹோமாகம, திருகோணமலை, அலஹெர ஆகிய பகுதிகளில் பலரை ஏமாற்றி இந்த பண மோசடியை மேற்கொண்ட கடத்தப்பட்ட நபர் சுமார் ஒரு வருடமாக கனடாவில் தங்கியிருப்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்களும் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பியந்தல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்த இருவரால் தனது மகன் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |