யாழில் இருந்து சென்ற நபர் இந்தியாவில் அதிரடி கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகில் இந்தியா சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்று இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் பயணம்..
இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை தேசிய அடையாள அட்டை ஆகியவை உடமையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த நபர் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர், கடந்த 6ஆந் திகதி இரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam