தென்னிலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட நபர்! கொலையில் அதிர்ச்சி பின்னணி
களுத்துறை - புளத்சிங்கள நாகஹதொல் பகுதியில் ஒருவர் தீவைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட நபர் மஹிங்கல - பாதுக்கை பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல நிஷாந்த என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்தவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் அருகே முகம் குப்புறக் கிடத்தப்பட்டு, அதன் மீது டயர்கள் பொருத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலத்த வெட்டுக் காயம்
இறந்தவரின் தலையில் பலத்த வெட்டுக் காயம் இருந்ததாகவும், அவரது தொடையிலிருந்து மார்பு வரை டயர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், மரணம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இருந்து, இறந்தவர் இன்று (28) காலை 10.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மத்துகம நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
