யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது(Photo)
சாவகச்சேரி மதுவரி திணைக்களத்துக்கு
அருகாமையில்உள்ள வீட்டில் பியர் மற்றும் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் நேற்று(05.02.2023) யாழ்
மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
போயா தினமாகிய நேற்றைய தினம் சாவகச்சேரி மது வரி திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் சாராயம் மற்றும் பியர் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அதிகளவிலான சாராய பொருட்கள் மற்றும் பியர்
ரின்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
