யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது (VIDEO)
இன்றையதினம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி - வாதரவத்தை பகுதியில் 50 லீட்டர் கசிப்புடன் அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட கசிப்புடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுன்னாகம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பினை உடமையில் வைத்திருந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (20) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 750 மில்லிமீட்டர் கசிப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரை எதிர்வரும் 2022.12.05 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட
கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan