மகனின் தவறான தொடர்பால் பறிபோன தாயின் உயிர்
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்ததுடன், அவருடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரின் தாயை கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (04.02.2023) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக அவரது மகள், சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு
இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எம்பிலிப்பிட்டி ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை நேற்றைய தினம் (04.02.2023) பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சடலம் கடத்தப்பட்டதாக கூறப்படும் சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண்ணின் சடலம் என்றும் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்திக் கொலை
உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதோடு, உரிமையாளரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பின்னர், அவர்களை தேடி இருவருடன் ஹோட்டலின் உரிமையாளர் காரில் சென்றுள்ளார். இதன்போது மனைவியுடன் தப்பிச் சென்றவர் அங்கு இல்லாததால் குறித்த நபரின் தாயை கடத்திக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டி மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
