யாழில் பல லட்சம் பெறுமதியான காரை வீதியில் விட்டு சென்ற நபர்.. மீட்ட பொலிஸார்
யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண பொலிசாரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் அடகு வைத்து சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளார்.
80 இலட்சம் ரூபாய்
உரிய காலப் பகுதியில் வாடகைக்கு எடுத்த காரினை நிறுவனத்திடம் ஒப்படைக்காத காரணத்தினால் நிறுவனத்தினர் வாடகைக்கு பெற்ற நபர் மீது பொலிஸ் முறைப்பாடு மேற்கொண்டனர்.

குறித்த வாடகை காரை யாழ்ப்பாணத்தில் பணம் கொடுத்து பெற்றவர் தொடர்பில் நீர் கொழும்புப் பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில் வேறு வழியின்றி வாடகைக்காரை பணம் கொடுத்து பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யாழ். நகரப் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
காரினை மீட்ட யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற நிலையில் நீர் கொழும்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam