யாழ். சாவகச்சேரியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்
யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம்
இதன்போது போலியான அனுமதிப் பத்திரத்துடன் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை தெரிய வந்ததாகவும் இதையடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம்(14) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri