நீர்த்தேக்கத்தில் மூழ்கி நபரொருவர் மாயம்! தேடுதல் தீவிரம்
வவுனியா - பம்பைமடு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் (கருங்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி) மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவினர் இன்றைய தினம் சென்றுள்ளனர்.
இதன்போது ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கிய நிலையில், நீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளார்.
சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி வயது 50 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கி தேடியுள்ளனர். எனினும் அவரை மீட்க முடியவில்லையெனவும்,சம்பவம் தொடர்பாக கிராம மக்களுக்கும்,பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
நீருனுள் மூழ்கிய நபரை மாலை 3 மணியளவில் இருந்து 6 மணி வரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரை மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
