தமிழர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொழும்பில் விபத்துக்குள்ளாகி பலி!
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் 3 வருடங்களுக்கு முன்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு வந்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே பலி
மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் இன்று (04) காலை மர கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
