அம்பாறையில் மரக்குற்றி விழுந்து உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பாறையில் கனரக வாகனத்தில் இருந்த மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை (Ampara) - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மர ஆலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபரின் மீது மரக்குற்றி சரிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ரசி குமார என்பவராவார்.

12 வருடங்களின் பின்னர் 420 ரூபாவாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி : துர்ப்பாக்கிய நிலையாக கருதும் ரணில் தரப்பு
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தலையில் ஏற்பட்ட பாரமான விசையுடனான தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பெரிய காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
