கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி நபரொருவர் பலி - மற்றொருவர் பலத்த காயம்
அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணை
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.