காட்டுயானை தாக்கியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம்- கஹடகஸ்திகிலிய திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (11.07.2023) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய- பபரஹெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பலி
குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றபோது யானை தாக்கியதாகவும் இதனையடுத்து இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
