புத்தளத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது (photo)
புத்தளம் - கிவுல பகுதியில் தோட்டமொன்றில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (10.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதன்போது 10 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பாலாவி
விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
