யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் இன்றையதினம் (22.10.2023) கைது செய்யப்பட்டள்ளார்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மீட்பு
மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கசிப்பு வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபரை விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
