சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவள (Kumara Pallewala) மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க (Ramanayake) ஆகியோர் தலைமையிலான போலீஸார் விரைந்து செயல்பட்டு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
