புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொதி செய்யப்பட்ட கசிப்பு பைக்கற்றுக்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை இன்று (21.03.2024) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர் பிரதீபனுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயசூரிய(72585), பணாவர(74996), பிரதீபன்(88509), சத்துரங்க(99804) ஆகிய பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டு 160 சிறு பொதிகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த 16 லீட்டர் சட்டவிரோத கசிப்பு பைக்கற்றுக்களுடன் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |