யாழில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வீடொன்றின் காணிக்குள் சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அதிகமான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பௌர்ணமி தினமான இன்றைய தினம்(25.10.2026) கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்தினவிற்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் , பொலிஸார் குறித்த வீட்டிற்கு விரைந்தனர் வீட்டில் சோதனை நடத்திய போது , வீட்டின் பின்புறமாக கிடங்கு வெட்டி அதனுள் மதுபான போத்தல்களை புதைத்து வைத்து , அவற்றை எடுப்பதற்கு ஏதுவாக கிடங்கில் சிறு துளை விட்டு , அதனூடாக போத்தல்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில் ,குறித்த நபரை கைது செய்த பொலிஸார் 187.5 மில்லி லீட்டர் (கால் போத்தல்) மதுபான போத்தல்கள் 45 இனை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam