கொழும்பு புறநகர் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் கைது
மிரிஹானை, கோட்டே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு திசை குற்றப் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, மிரிஹானை, கோட்டே வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார்.
மேலதிக விசாரணை
இதன்போது போலியாக அச்சிடப்பட்டிருந்த 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் 06, 500 ரூபாய் நாணயத்தாள் 01, கணினியொன்று, ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.