வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் - இலங்கையில் பெற்றோருக்கு கொலை அச்சுறுத்தல்
பாணந்துறையில் பணக்கார வயோதிப தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற நபரொருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.
கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பிள்ளைகள் வசிக்கும் நிலையில் 76 மற்றும் 75 வயதுடைய பணக்கார தம்பதியினர், சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.
கொலை மிரட்டல்
இதனையறிந்த சந்தேகநபர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 லட்சம் ரூபா கப்பம் பெற்றுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த தம்பதியினர் மற்றுமொரு காணியை அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் இதனை அறிந்த சந்தேகநபர் தமக்கு கொலைமிரட்டல் விடுத்து மேலும் 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
அதற்கமைய, பணம் பெற வருமாறு சந்தேக நபரை, தம்பதி அழைத்த நிலையில் மறைந்திருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
