யாழ்.மாநகரசபை காணியை அபகரித்து தனதாக்கி கொண்ட நபர்! நேரில் சென்ற முதல்வருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அத்தோடு, மாநகரசபைக்கு சொந்தமான காணியை தவறான உறுதி முடித்து தனிநபர் ஒருவர் தனதாக்கி கொண்டுள்ளதாக சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த காணி சம்பந்தமான சகல ஆவணங்களையும் ஆணையாளருக்கு அனுப்பி மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெகுவிரைவில் எமதாக்கிக் கொள்வோம் எனவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam