யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் எடுத்த முடிவு
யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது அளவெட்டி - விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்தவர் மதுப் பாவனைக்கு அடிமையானவர். இந்நிலையில், கடந்த 18ஆம் திகதி மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மரண விசாரணைகள்
பின்னர் சிகிச்சையின் பின் நேற்றையதினம் வீடு திரும்பி, வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டார்.
இதனையடுத்து, இன்று காலை தவறான முடிவெடுத்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
