யாழில் குடும்பஸ்தர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு தப்பியோடிய நபர்கள்
35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீது பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சை
அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
