33 ஆண்டுகளுக்கு பின் கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி (Photos)
கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு 33 வருடங்களுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டுக்கு பின் தற்போது ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆலயத்தில் வழிபாடுகள்
இந்த கோரிக்கைக்கு அமைவாக விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (22.09.2023) மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் குருமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan