2022 பாதீட்டு விவாதத்தை சைகை மொழியில் மொழிப்பெயர்க்க அனுமதி
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தைக் கருத்தில் கொண்டு, ஒரே நேரத்தில் சைகை மொழி விளக்கத்தை வழங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையிலான நாடாளுமன்ற நடவடிக்கைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க (Dhammika Dasanayaka) இன்று இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்புக்கு இணையாக ஒரே நேரத்தில் சைகை மொழிப்பெயர்ப்புக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்றம் நவம்பர் 09 முற்பகல் 10.00 மணிக்கு கூடும். அத்துடன் கூட்டத்தொடர் மாலை 5.30 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2021 ஜூலை 20, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பொதுக் கணக்குகளுக்கான குழுவால்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அறிக்கைகள் மீதான அரசாங்கத்தின்
ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam