ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் என கூறப்படும் மிதிகம ருவான் எனப்படும் ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவம் தொடர்பாக
அதன்படி, பூஸா சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானிடமிருந்து ஒக்டோபர் 13 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதவான் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கினார்.
சட்டவிரோதமாக ஹெரோயின் இறக்குமதி மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மிதிகம ருவானிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மன்றில் சுட்டிக்காட்டியிருந்த்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
