சில பொருட்களின் இறக்குமதிக்கு தளர்த்தப்பட்ட தடை! நிதியமைச்சர் வழங்கியுள்ள அனுமதி
சில பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான டைல்கள் உள்ளிட்ட பல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரியவருகிறது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சில பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், கலவை மேம்பாட்டுத் திட்டங்கள், முதலீட்டுச் சபையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களைத் தவிர அரசாங்கத் திட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்றபோதும், அத்தகைய பொருட்களை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் விற்பனை செய்ய இறக்குமதி செய்யக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், இறக்குமதியானது 180 நாட்களுக்கு வழங்கப்படும் கடன் பத்திரங்களுக்கு உட்பட்டது மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் அனுமதி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri