கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி - வெளிவந்த வர்த்தமானி
கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கோவிட் தொற்றுக்கு இலக்காகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இது குறித்து அறிவித்தார் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினையொன்றுக்கு தீர்வு வழங்கப்பட்டதாக தாம் கருதுவதாக அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கோவிட் - 19 சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான அரச வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
கோவிட் -19 சடலங்களை தகனம் செய்வது தொடர்பான இலங்கை அரசின் தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச அளவில் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடரிலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, கோவிட்- 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் முடிவு குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப குழு அளித்த அனுமதியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
