691.5 மில்லியன் யூரோக்களை கடனாக பெற அரசாங்கம் அனுமதி
வெளிநாட்டு கடன்கள் மூலம் பாரிய நிதியளிக்கப்பட்ட திட்டங்களை, அரசாங்கம் பகிரங்கமாக நிராகரித்த போதிலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் 58 கிலோமீட்டர் பிரிவுக்காக (குருநாகலில் இருந்து தம்புள்ளைக்கு) 691.5 மில்லியன் யூரோக்களை கடனாக பெற ராக்டன் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கடன், இங்கிலாந்து ஏற்றுமதி நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஆண்டு, நிதி அமைச்சு, ராக்டன் இன்டர்நேஷனலுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த ஒப்பந்த செலவுக்கு 100 சதவீத வெளிநாட்டு நிதியுதவியைப் பெற ஒப்புதல் அளித்திருந்தது.
இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டு கடனைச் சமாளிக்கவும், தொற்றுநோயிலிருந்து மீளவும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இங்கிலாந்து அரசாங்கம் சுமார் யூரோ 691.5 மில்லியன் வசதியை வழங்குகிறது. எனினும் பொருளாதார சுமையற்ற சிறந்த காலங்களில் கூட இது வணிக ரீதியாக விலையுயர்ந்த கடன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.