யாழில் மடு அன்னைக்கு ட்ரோன் மூலம் மலர் தூவ அனுமதி
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மடு அன்னையின் சொரூபம் தாங்கிய ஊர்திப்பவனி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பயணப் பாதையெங்கும் ட்ரோன் (Drone) மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பெற்றுக் கொடுத்துள்ளார்.
மருதமடு அன்னையின் முடிசூட்டு நிகழ்வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் கடந்த வாரம் யாழ் மாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
கோரிக்கை
யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை நோக்கி திருச்சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அன்னையின் பயணப் பாதையெங்கும் ட்ரோன் மூலம் பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஏற்பாட்டுக்குழுவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட அமைச்சர், மடு அன்னையின் சொரூப விஜயங்களின்போது பயணப் பாதைகளில் ட்ரோன் வானூர்தி மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
முன்னதாக பாதுகாப்பு காரணமாக தனிப்பட்டவர்களால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் வானூர்தி பாவனை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
