வெளிநாட்டவருடனான பதிவு திருமணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும், இலங்கை பிரஜை ஒருவருக்கும் பதிவு திருமணம் செய்யும் போது, தேவையான ஆவணங்கள் குறித்த தெளிவூட்டலை பதிவாளர் நாயகம் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ், இலங்கையர் ஒருவருக்கும், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும் பதிவு திருமணம் செய்யும் போது, வெளிநாட்டு பிரஜையினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. செலுப்படியாகும் வெளிநாட்டு கடவூச்சீட்டு.
02.சிவில் நிலைமைகளை உறுதிப்படுத்தும் ஆவணம்
03.பிறப்பு சான்றிதழ்
குறித்த ஆவணங்களுடன் வெளிநாட்டு பிரஜையின் சுய சுகாதார அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கும், இலங்கையர் ஒருவருக்கும் இடையில் பதிவு திருமணம் செய்வதானது, தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் ஏற்படக்கூடிய சமூக பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
