இலங்கையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஆகியோரின் அனுமதிக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இலங்கை பொலிஸாருக்கு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கும் அது தொடர்பான விசேட தேவைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |