விலங்குகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதி! கிளம்பியது சர்ச்சை
விவசாய நிலங்களுக்குள் உட்புகும் விலங்குகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குரங்குகள், மயில்கள், மர அணில்கள், காட்டுப் பன்றிகள் மற்றும் முள்ளம் பன்றிகளை கொல்வதற்கு வழங்கியுள்ள அனுமதியை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது உணவை தேடிச் செல்லும் இவ்விலங்குகளை கொல்வது பெரிய அநீதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,