பூநகரி காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி மறுப்பு (Photos)
பூநகரி - கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று (03.05.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதற்கான அனுமதிக்காக கோரப்பட்டிருந்தது.

அதன் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், எஸ்.சிறிதரன், எஸ்.கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்
மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், மன்னாரில் மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பில் ஆராய்ந்தே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் விபரங்களை பெற்று தனியாக கூடி ஆராய்ந்த பின்பே அனுமதி வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அதானி நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri