4 இலட்சம் பேருக்கு நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விநியோகம்
தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்த 4 இலட்சம் பேருக்கு இதுவரை நிரந்தர அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிலவிய சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக, சாரதிகளுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன.
இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கை
தற்போது அந்த நடைமுறையின் கீழ் தற்காலிக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களுக்கு நிரந்தர அட்டைகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 4 இலட்சம் பேருக்கு நிரந்தர அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இலட்சம் அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன.
இவை எதிர்வரும் நாட்களில் தற்காலிக அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மேலதிகமாக 10 இலட்சம் அட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்ததுள்ளார்.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam