மட்டக்களப்பு - பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா இன்று ஆரம்பம்
மட்டக்களப்பு - பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா, திருக்கதவு திறக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (10.10.2026) இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அம்பாள் ஊர்வலமாக ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, விசேட பூஜைகள் ஆரம்பமாகியுள்ளன.
09 நாட்கள் நவராத்திரி பூஜைகள்
நவராத்திரி விரதம் இன்று(11) ஆரம்பமாகியுள்ள நிலையில், தொடர்ந்து ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியருக்கான சிறப்புப் பூஜைகள் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து, இறுதி நாள் விசேட நிகழ்வுகளுடன் கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, தேவாதிகள் ஆடிவர, பெண்கள் கற்பூரச்சட்டிகளை ஏந்தியபடி அம்பாளை ஊர்வலமாக வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உற்சவகால பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ குமாரலிங்கம் பூசகர் தலைமையில் பூசகர்களால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கான அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் திருக்கதவு திறக்கப்பட்டு வருடாந்த சக்தி விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று(11) மாலை அன்னையின் வாழைக்காய் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை(12) திங்கட்கிழமை அன்னையின் ஊர்காவல் உலா இடம்பெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை(13) காலை சக்தி மகா யாகம் நடைபெறவுள்ளதுடன், மாலை நோன்பு கட்டும் நிகழ்வும் கடல்குளிப்பு உற்சவமும் இடம்பெறவுள்ளன.
சக்தி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீமிதிப்புத் திருச்சடங்கு எதிர்வரும் புதன்கிழமை(14) காலை நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு - விமான தடையால் ரியாத்தில் சிக்கிய அதிகாரிகள்
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri