டெங்கு நோயாளர்களின் மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் டெங்கு இறப்பு விகிதங்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல (Seetha Arambepola) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"இந்தாண்டு ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும் நேற்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
இறப்பு விகிதம்
கடந்த காலங்களில் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத் துறைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

உண்மையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் இந்த வருடம் குறைக்க முடிந்துள்ளது. ஜனவரி மாதத்தில் 64 டெங்கு அபாய வலயங்கள் இருந்தன. இதுவரை இரண்டு வலயங்கள் வரை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது இன்று 200 நோயாளிகளாகக் குறைந்துள்ளது.
நோய்தடுப்பு வேலைத்திட்டம்
காலநிலையும் இதில் தாக்கம் செலுத்தியது என்பதைக் கூற வேண்டும். ஜனவரி முதல் இதுவரை 20,365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 7289 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும், இந்த ஆண்டில் 08 டெங்கு மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கு தற்போது மிகவும் செயற்றிறன்மிக்க வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே, தொற்றுநோய்க்கு ஏதுவான சூழ்நிலைகளிலிருந்து விடுபட இது மிகவும் உதவியாக இருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        