முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை மாணவர்களால்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தவசீலன்
படங்கள் - குமணன்(நன்றி)
நினைவேந்தல் வல்வெட்டித்துறையில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
திருகோணமலை
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதோடு, அந்த காலத்தில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் (NECC) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வாரத்தின் ஒரு பகுதியாக, மே 15, 2025 அன்று திருகோணமலை மாவட்டத்தின் கங்குவேலி கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து நிகழ்வை கடைபிடித்தனர்.
முல்லைத்தீவு
தமிழினப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (15.05.2025) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மற்றும் கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட ஞா.யூட்சனின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
