சிறை விடுப்பில் இருந்த தண்டனைக் கைதி பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை விடுப்பில் இருக்கும் பேரறிவாளன் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில்சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் என்ற சிறை விடுப்பு வழங்கப்பட்டது.
அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் சிறை விடுப்பு காலம் முடியும் தருவாயில் மீண்டும் அதனை நீடிக்க கோரி தமிழக அரசாங்கத்திடம் மனு செய்து வந்தார்.
தற்போது அவருக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறை விடுப்பில் இருந்த பேரறிவாளனுக்கு மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தற்பொழுது அவர் தருமபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



