பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அம்பாறை, சேரகம வேரன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக விடுதியின் உபவேந்தர் நேற்று முன்தினம் (21) பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை

இவ்வாறு காணாமல் போன மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்த போது அவர் குருநாகல் பிரதேசத்தில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் விஜித விஜேகோன் தலைமையில் பேராதனை பொலிஸார் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan