அம்பாறையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை: பெரும் சிரமத்திற்குள்ளாகும் மாணவர்கள் (Photos)
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று , நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடிகால் இன்மையே முக்கிய காரணம்
அத்துடன், அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயமும் வெள்ள நீரில் முழ்கும் நிலையில் உள்ளது. இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆசிரியர்கள் வெள்ள நீர் தேங்கி உள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் வெள்ள நீர் காரணமாக சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
