அரசாங்க அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்ற முடியுமா..! சஜித் விடுத்துள்ள சவால்
அரசாங்க அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்ற முடியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெரனியகல சிறி சமன் வித்தியாலயத்திற்கு நேற்று (06.12.2022) பேருந்து ஒன்றை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தாம் பொதுமக்களுக்கு செய்து வரும் சேவையை கிண்டல் செய்பவர்களினால் ஆட்சி இன்றி சேவை செய்ய முடியுமா என அவர் சவால் விடுத்துள்ளார்.
மக்கள் சேவை
நாட்டு மக்களுக்காக வழங்கி வரும் சில சேவைகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
74 ஆண்டு கால வரலாற்றில் ஆளும் எதிர்க்கட்சிகள் மரபு ரீதியாக முன்னெடுக்கும் அரசியலுக்கு அப்பால், தாம் மக்கள் சேவை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
